காரணங்களும் அவற்றிற்கான எதிர்வினைகளும் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் புரிதலின் அடிப்படையில் தங்கியிருக்கும் வரைதான் அவற்றின் விளைவுகளின் சாதகத்தன்மை உறுதிசெய்யப்படும்.
''''காய்ச்சல் வந்தால் பனடோல் எடுத்தே ஆகவேண்டும்; இருள் வந்தால் விளக்கு ஏற்றியே ஆகவேண்டும்; தீப்பிடித்தால் தண்ணீர் ஊற்றியே ஆகவேண்டும்.''''
இது பொதுப்படையான ஒரு கூற்று.
'காய்ச்சலின் பின்புலம் மாறுபடுகையில் பெனடோல் எடுப்பது மடமை. தவிர, அது காய்ச்சலின் நிலமையை மோசமாக்கவும் வாய்ப்புகளுண்டு:
இருளின் போதெல்லாம் விளக்குகள் தீர்வாவதில்லை. தீப்பற்றும் நிலையிலான வளிமண்டலம் அல்லது சூழல் இருக்கிறபோது, மாற்று ஒளி முதலை நோக்கி நகர வேண்டும். தவிரவும், இருள் ஏற்பட்டதன் காரணமும் அறியப் பட வேண்டும். இருள் ஏற்படுத்தப்பட்டது ஒளி இருப்பதிலும் சிறந்ததாக இருக்கிற்ன சந்தர்ப்பங்களும் இல்லாமலில்லை.
தீப்பிடித்ததற்கான காரணம் மின் ஒழுக்காயின், அங்கு தண்ணீரை ஊற்றுபவன் தற்கொலை செய்தவனாகிறான், தீயில் மாட்டியவர்களையும் கொன்றவனாகிறான்.
இங்கு, பெணடோல், விளக்கு, தண்ணீர் என்பன அவற்றின் பொதுப்புலத்திலிருந்து புரியப்பட வேண்டும்.
பதிவின் நோக்கம், ரெடிமேட் தீர்வுகளைப் பற்றியதல்ல. பணடோல் என்பது காய்ச்சலுக்கான மருந்து என்ற பொதுப்புலத்தினை குறிக்கிறது. அது போல்தான் மற்றவையும்.

Comments
Post a Comment