எது இன்பம்

 தனித்திருப்பதிலிருக்கிற இன்பம் வேறெதிலும் இராது என்றிருந்த எனக்கு அவளுடனிருப்பதின் இன்பத்தை காட்டி என்னை சுயநினைவிழக்கச் செய்துவிட்டாள் தோழி...

இப்போதுதான் தெளிவடைகிறேன்.

உண்மையான இன்பம் நம்மை நேசிப்பவரின் நினைவால் எம் உள்ளம் நிறைந்து விடுவதில்தான் என்று.

இறைவா உன் நினைவுகளை காணோமே என் பாழடைந்த உளக்காட்டில்....

எங்கணம் நான் இன்பமடையப் போகிறேன்....?


-உமைர்  

26.03.2021

















Comments