மூத்தவனும் இளையவனும்

காட்டுமிராண்டிகளின் அடிமட்ட கலாச்சாரத்தை அமுல்படுத்த கங்கணம் கட்டிக்கொண்டு, அவ்வளவு இன்பமடைகிறார்கள் வையகத்து மாந்தர்கள்.

எதிர்ப்பவனெல்லாம் சமூகமயமுறாதவனாம். அன்டி சோசியலாம்!

தானாக வர வேண்டிய மரியாதையை வாய்திறந்து கேட்கிறான்.
பாவம்! தகுதியில்லாமையினால் அப்போதும் அவனுக்கு மரியாதை கிடைப்பதில்லை. கோப மேலீட்டால் கெட்ட வார்த்தைகள் பிரயோகிக்கிறான். கேட்டால், மூத்தவனாம்!

ஒழுக்கம் சொல்லிக் கொடுக்க கடுமை வேண்டும் என்கிறான். ஸலாம் கொண்டு ஆரம்பிப்பது என்கிற ஒழுக்கம் மறந்து மற்றவன் ஸலாம் சொல்லவில்லை என்று குரைக்கிறான்.

உதவி செய்வேன், எனக்கு அடிமைச் சேவகம் புரிந்தால் என்கிறான்.
மறுத்தால் ஒதுக்கி வைப்பேன் என்கிறான்.

Comments