நேரவிரயம் - பாகம் ஒன்று

எனக்கு நேரம் நிறையவே இருக்கிறது. நண்பர்களுடன் கூத்து, இந்திய ஹீரோ வேர்ஷிப் திரைப்பட ரசனை இப்படி எதுவும் பரிச்சயமில்லாத ஒரு இன்ட்ரொவேர்ட்க்கு இது சாதாரணம் தான்.
மிஞ்சிப்போனால் வீட்டிற்கு வரும் உறவினர்க் குட்டீஸ்களுடன் கொஞ்ச நேரம் துள்ளுவேன்.
இது தவிர என் நேரம் கழிவதெல்லாம் ஒன்று, படிப்பு, கொம்ப்யூடர், டீவீ எபிஸோட்ஸ், இல்லையென்றால், கட்டிலில் கனவுப் படுக்கை அல்லது உறக்கத்தில் தான்.

நேரம் அதிகமாகவே வீணாவது தெரிகிறது.
இந்தும் அல்குர்ஆனை ஒரு தடவை கூட கருத்தணர்ந்தோ அல்லது மொழிபெயர்ப்பிலோ வாசித்து முடித்ததில்லை வாழ்நாளில்.

வாசிக்க ஏராளம் ஏராளம் இருக்கிறது. வாசிக்க வேண்டுமென்று Goodreads இல் To Read பட்டியலில் சேர்த்து வைத்திருக்கிற நூல்களே ஒரு மூட்டை வரும் என்றிருக்கிற போது வாசிக்க மனதில் நாட்டம் கொண்ட நூற்கள் எம்மாத்திரம்...!

சுற்றியிருக்கிற நிறையப்பேரிடம் நிறையவே கற்க இருக்கிறது. அவர்களிடம் கற்பவற்றை எடுத்த நடக்கவேண்டிய பாடம் என்றும் தவிர்ந்து கொள்ள வேண்டிய நடத்தை எறும் இரண்டாக வகுப்பது எனது பகுத்தறிவின் விளைவு.

சிறுவயதில் நகறைய வாசிப்பேன். மதனகாமராசன் கதைகள் நல பாடசாலை நூலகத்திலிருந்து எடுத்து  வந்து அன்று பிற்பகல் வகுப்புக்கு செல்ல முன்னரே வாசித்து முடித்து அடுத்த நாளே நூலகத்திற்கு திருப்பியளித்த சம்பவமெல்லாம் அப்போது சாதாரணம். ஆனால் இப்போதைய என் வாசிப்பு நிலை பரிதாபகரம். சுற்றியிருந்த வாசிப்பை நோயாகக் கருதும் தோழர்களிடம் இருந்து தொற்றிக்கொண்ட சோம்பல் தான் முதற்காரணி என்பேன்.

இருந்தாலும் ஆதையும் ஆர்வமும் மிகுந்து லுத்பியிடம் சில டிப்ஸ் கேட்டேன். வாசிப்பின் நோக்கத்தை உதாரணம் சொல்லி புரியவைத்தார். கதைகளை வாசித்து வாசிப்பரவத்தை வளர்க்கச் சொன்னார். பொன்னியின் செல்வனில் ஆரம்பித்தேன். மூன்றாம் பாகம் போகிறது

Comments