வளர்ச்சி. வலிமை. பரீட்சிப்பு

டைனோஸர்களுக்கும் யானைகளுக்கும் இடையில் ஒரு வேறுபாடு...

தன்னைச் சுற்றியதான கட்டுப்பாடுகளின் மீதான அணுகுமுறையிலான வேறுபாடு அது.

டைனோஸர்கள் எப்போதும் தன்னைச் சுற்றிப் போடப்பட்டுள்ள வேலிகளின் மீது தன்னிடம் உள்ள முழு வலிமையையும் அடிக்கடி பிரயோகித்து எப்போதாவது அந்த வேலி வலுவிழக்காதா அல்லது அதன் அளவு வலிமையை தான் பெறமாட்டோமா என்று பரிசோதித்துக் கொண்டேயிருக்கும். ஒருநாள் தன் சுதந்திரத்தை நோக்கி பயணிக்கும்.
யானைகள்...?

எவ்வளவு பெரிதாக வளர்ந்து எவ்வளவு வலிமை பெற்றுவிட்ட போதிலும், தன் சிறு பராயத்தில் தன் பாகன் தன் காலில் கட்டிய அந்த சிறு கயிற்றின் வலிமையை வைரத்தினதாக நினைத்திருக்கும். அது தன் வலிமையின் வளர்ச்சியை பரீட்சிக்க முனைவதில்லை.

நாம் வளர்கிறோம்...!
நம்மில் ஏற்படுகிற அந்த வளர்ச்சி எம் தோற்றத்தில் மட்டுமானதல்ல. அது வாழ்வின் பல கோணங்களில் தன் கிளைகளை ஊடறுக்கிறது.

Comments